• Register

Melur News

கிரானைட் மோசடி வழக்கில் 3,633 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

மேலூர் பகுதிகளில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மேலூர் கோர்ட்டில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு தரப்பு வக்கீல் ஷீலா, குற்றப்பிரிவு ஆவண காப்பக டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜாசிங், முத்துப்பாண்டி ஆகியோர் இன்று காலை மேலூர் கோர்ட்டில் ஆஜராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில் 4 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கீழவளவு அருகே உள்ள கீழையூர், செம்மன்குளம், பாறைபுறம்போக்கு ஆகிய பகுதிகளில் கிரானைட் கற்கள் எடுத்ததில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது மற்றும் 20 பேர் மீது 299 பக்க குற்றப்பத்திரிகையும் இதில் ரூ.277.84கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாதவூர் பாறைபுறம்போக்கு பகுதியில் மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது மற்றும் 19 பேர் மீது ரூ.17.68 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 268 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒத்தக்கடை அருகே திண்டியூர் கண்மாயில் பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் 21 பேர் மீது ரூ.662.78 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2 ஆயிரத்து 738 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடையப்பட்டி ஊரணி புறம்போக்கு பகுதியில் மற்றொரு கிரானைட் நிறுவனத்தின் மீது ரூ.407.66 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், 328 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.1365 கோடியே 96 லட்சம் மதிப்பில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் 3633 பக்க குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Source: http://www.maalaimalar.com/News/District/2016/12/21123525/1057363/Granite-scam-case-3633-page-charge-sheet-filed.vpf

 

மேலூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் விலை குறைவால் விவசாயிகள் வருத்தம்

மேலுார் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

மேலுார் மற்றும் ஆட்டுக்குளம், சருகுவலையபட்டி, சேக்கிபட்டி உள்ளிட்ட பல கிராம மக்களின் வாழ்வாதாரமே தக்காளி விவசாயம்தான். விதை பாவிய நாள் முதல் தக்காளி பறிப்பதற்கு தேவைப்படும் 40 நாட்கள் வரை தண்ணீர் பாய்ச்சி, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து சந்தைக்கு கொண்டு சென்றால் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தோட்டத்தில் காய்களை பறிக்காததால் செடிகளில் தக்காளி அழுகி வருகிறது.

சருகுவலையபட்டி சுரேஷ்:- வங்கியில் கடன் வாங்கி ஏக்கருக்கு 31 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்கிறோம். போதிய விலை இல்லாததால் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அதனால் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதோடு, தரமான விதை மற்றும் இடுபொருட்களை குறைந்த விலையில் கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும், என்றார்.

 

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1674204

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook