• Register

Melur News

கரும்பில் பிடித்த தீயை அணைக்க முயன்ற விவசாயி மூச்சுத்திணறி உடல் கருகி பலி

மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த விவசாயி சிவசாமி ( 70 ). உச்சியரிசான்பட்டி ரோட்டில் உள்ள இவருடைய வயலின் அருகே ஊருக்கு செல்லும் பாதையில் இருந்த அருகம்புல்லுக்கு தீ வைத்து அப்புறபடுத்திஉள்ளார். அந்த தீ வேகமாக பிடித்து அருகே ராமானுஜம் என்பவருடைய வயலில் பயிரிட்டுள்ள கரும்பு தோட்டத்திற்கு பரவி பற்றி எரிந்தது.

இதை கரும்பில் பிடித்த தீயை அணைக்க முயன்ற விவசாயி சிவசாமி மூச்சுத்திணறி தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2017/01/06212708/Dress-cane-fireTried-to-turnFarmer-suffocated--The.vpf

கிரானைட் மோசடி வழக்கில் 3,633 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

மேலூர் பகுதிகளில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மேலூர் கோர்ட்டில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு தரப்பு வக்கீல் ஷீலா, குற்றப்பிரிவு ஆவண காப்பக டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜாசிங், முத்துப்பாண்டி ஆகியோர் இன்று காலை மேலூர் கோர்ட்டில் ஆஜராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில் 4 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கீழவளவு அருகே உள்ள கீழையூர், செம்மன்குளம், பாறைபுறம்போக்கு ஆகிய பகுதிகளில் கிரானைட் கற்கள் எடுத்ததில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது மற்றும் 20 பேர் மீது 299 பக்க குற்றப்பத்திரிகையும் இதில் ரூ.277.84கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாதவூர் பாறைபுறம்போக்கு பகுதியில் மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது மற்றும் 19 பேர் மீது ரூ.17.68 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 268 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒத்தக்கடை அருகே திண்டியூர் கண்மாயில் பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் 21 பேர் மீது ரூ.662.78 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2 ஆயிரத்து 738 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடையப்பட்டி ஊரணி புறம்போக்கு பகுதியில் மற்றொரு கிரானைட் நிறுவனத்தின் மீது ரூ.407.66 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், 328 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.1365 கோடியே 96 லட்சம் மதிப்பில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் 3633 பக்க குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Source: http://www.maalaimalar.com/News/District/2016/12/21123525/1057363/Granite-scam-case-3633-page-charge-sheet-filed.vpf

 

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook