• Register

Melur News

மேலூர்-சென்னைக்கு இடையே புதிய பஸ் போக்குவரத்து: சாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மேலூர் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெளிநாடுகளில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் அலுவலகங்களில் பலர் வேலை செய்கின்றனர். மேலூரில் இருந்து ஏராளமானவர்கள் என்ஜினீயரிங் மற்றும் உயர்கல்வி படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை செல்ல பல பஸ்கள் மேலூர் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றது. இதனால் மேலூரில் இருந்து சென்னை பஸ்சில் செல்ல மேலூர் பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

 
மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. சாமி இது பற்றி சட்டசபையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக மேலூரில் இருந்து சென்னைக்கு பஸ் விட உத்தரவிட்டார். அதோடு கடந்த 19-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா புதிய பஸ் போக்குவரத்தினை தொடங்கி வைத்தபோது மேலூருக்கும் நவீன சொகுசு பஸ் வழங்கினார்.

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook