• Register

Melur News

மேலூர் அருகே கந்து வட்டி கொடுமை: தாசில்தார் கைது

மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுசீலா, கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

நான் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம் பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சிவமணி என்பவரிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆவணங்களை கொடுத்து ரூ.80 ஆயிரம் கடன் பெற்றேன். சில மாதங்களுக்கு பிறகு வட்டியுடன், அசல் தொகையையும் சேர்த்து ரூ.95 ஆயிரம் சிவமணியிடம் கொடுத்தேன்.

Read more: மேலூர் அருகே கந்து வட்டி கொடுமை: தாசில்தார் கைது

கிரானைட் தொழிற்சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தின் 3 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில் பி. ஆர்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் கற்களுக்கு பாலீஸ் போடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நகர்நல அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

 
அதன்படி இன்று காலை நகர்நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலைக்கு சென்று அங்குள்ள கட்டிடங்களையும், அதற்கான ஆவணங்களையும் சரிபார்த்தனர். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த மூன்று 4 மாடி கட்டிடங்கள் நகர்நல அமைப்பின் அனுமதியின்றி கட்டப்பட்டது தெரிய வந்தது.

Read more: கிரானைட் தொழிற்சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தின் 3 கட்டிடங்களுக்கு சீல்...

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook