• Register

Melur News

ஓட... ஓட... கிடைத்தது குதிரை, மாடுகளுக்கு பரிசு

மேலுார் அருகே இடையபட்டி வெள்ளிமலையாண்டி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.சின்னமாடு பந்தயத்தில்

ஒட்டிப்புரம் புதுார் அபிநாயகி, சூரத்துார்பட்டி இளவரசு, பரவை சீலைக்காரி அம்மன் மாடுகள் முதல் மூன்று பரிசுகளை வென்றன. சின்னமாடு பந்தயத்தில் கஞ்சப்பநாயக்கன்பட்டி காரணத்தான் சுவாமி, சூரக்குண்டு கார்த்தி, இ.புதுப்பட்டி முனுசாமி மாடுகள் பரிசுகளை வென்றன. பெரியமாடு பந்தயத்தில் நெல்லை வெங்கடேஷ், ஆட்டுக்குளம் அழகம்மாள், ஊர்சேரி சந்தானி மாடுகள் பரிசுகளை வென்றன.குதிரை வண்டி பந்தயத்தில் 14 குதிரைகள் கலந்து கொண்டன. திருச்சி நம்பி உதயசூரியன் குதிரை முதல் இரண்டு பரிசுகளையும், புதுக்கோட்டை செந்தில்பாலாஜி குதிரை மூன்றாம் பரிசையும் வென்றது.பாலமேடு:

மறவபட்டி மகமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி

பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் அவனியாபுரம்

மோகன், பசும்பொன், மலம்பட்டி காயத்திரி, நடுமாடு போட்டியில் பாண்டி கோயில் பாண்டியராஜன், பாண்டிச்சாமி, அலங்காநல்லுார் ரவிச்சந்திரன், சின்னமாடு போட்டியில்

பாண்டிகோயில் பாண்டிச்சாமி, கூடலுார் குப்பத்துராஜா,

தவிட்டான்பட்டி அமர்நாத்

ஆகியோரது வண்டிகள் வெற்றி பெற்றன.

 

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1749356

மேலூர் அருகே நெல் பயிர் கருகியதால் வயலில் மயங்கி விழுந்த விவசாயி சாவு

நெல் பயிர் கருகியதால் மனவேதனையில் வயலில் மயங்கி விழுந்த விவசாயி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

நிலத்தடி நீர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினட்டாங்குடியை சேர்ந்த மந்தக்காளை என்பவருடைய மகன் ராமு ( 47 ). விவசாயியான இவர் 2 ஏக்கரில் வாழையும், 1 ஏக்கரில் நெல்லும் பயிரிட்டு இருந்தார். இந்த பயிர்களின் தண்ணீர் தேவைக்காக கூட்டுறவு வங்கி மற்றும் வெளி இடங்களில் கடன் வாங்கி கிணற்றை தூர்வாரி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் கால்வாயில் பெரியாறு பாசன தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் கடும் வறட்சி ஏற்பட்டு மேலூர் தாலுகாவில் தற்போது நிலத்தடி நீர் குறைந்து வருகிறது.இதையடுத்து வாழை, நெல் பயிரை எப்படி காப்பாற்றுவது, வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று மனவேதனை அடைந்த விவசாயி ராமு அவருடைய மனைவி பஞ்சுவிடம் இதுகுறித்து கூறிஉள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல் கணவன் மனைவி இருவரும் வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது வயலில் நெல்பயிர்கள் கருகியதை பார்த்த ராமு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

சோகம்

உடனே அவரை, சிகிச்சைக்காக அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் மேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு விவசாயி ராமுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விவசாயி ராமுவுக்கு ரூபன்குமார் ( 17 ), ராகுல் (16 ) என்ற 2 மகன்கள் உள்ளனர். விவசாயி ராமு இறந்ததினால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2017/01/07011609/Rice-crop-near-MelurIn-the-field-fainted-karukiyat.vpf

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook