• Register

Melur News

மேலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக மது குடித்துவிட்டு போதையில் இளம்பெண் தள்ளாடி ரோட்டில் விழுந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர் அருகே ஒரு கோவிலில் குடும்பத்துடன் ஒரு பெண் சாமி கும்பிட வந்தார். அப்போது அங்கு அந்த பெண்ணுக்கும் உறவினர்களுக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் கோபித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அதன் பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று அந்த பெண் மது வாங்கி மறைவிடத்தில் வைத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது.

சுயநினைவை இழந்த அவர், ரோட்டில் தள்ளாடிய படி செக்கடி பகுதியில் சுற்றிதிரிந்தார். அதிக மது குடித்ததால் அவரால் நடக்க முடியவில்லை. இதனால் ரோட்டோரத்தில் கீழே விழுந்து புரண்டார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் முகம் சுழித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் மகளிர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மது குடித்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளியவைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

 

Source: http://www.maalaimalar.com/News/District/2016/08/04093349/1030550/family-dispute-young-women-alcohol-drunk-in-melur.vpf

மேலூரில் கதவை உடைத்து 35 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

மேலூரில் உள்ள வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்னழகு. குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசிக்கிறார். இவர் நேற்றுமுன்தினம் தனது தாயார் வீட்டிற்கு பட்டூர் கிராமத்துக்கு சென்று விட்டு நேற்று மதியம் மேலூர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்ற போது பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்ததும், அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ.50 ஆயிரமும், மேலும் 3 விலையுயர்ந்த கேமிராக்கள், 2 லேப்டாப்கள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், வெள்ளி பாத்திரங்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SourcE: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/06/07004117/Broke-the-door-in-Melur--35-pounds-of-jewelery-Rs.vpf

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook