• Register

மேலூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் மறியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழகத்தில் நெடுஞ் சாலை ஓரம் இருந்த மதுக் கடைகள் அகற்றப்பட்டன. மேலூர் வட்டத்தில் இருந்த 24 கடைகளில் 20 கடைகள் அகற்றப்பட்டு மேலவளவு, வெள்ளளூர், கோட்டநத்தம்பட்டி, தெற்குத்தெரு ஆகிய 4 கிராமங்களில் மட்டுமே தற்போது மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

20 கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் மேற்கண்ட 4 கடைகளிலும் மது பாட்டில்களை வாங்க குவிந்து வருகின்றனர்.

மேலூர் அருகே உள்ள வெள்ளளூரில் உள்ள மதுக்கடையில் மதுப் பிரியர்கள் அதிகளவில் திரளுவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றர்.

இன்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மதுக்கடை முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கீழவளவு போலீசார் மற்றும் தாசில்தார் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Source: http://www.maalaimalar.com/News/District/2017/04/03143814/1077791/Melur-near-Tasmac-shop-road-blocked.vpf

Add comment


Security code
Refresh

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook