• Register

மேலூர் கோர்ட்டில் கிரானைட் முறைகேடு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேலூர் கோர்ட்டில் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதில் சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் 16 பேர் சேர்ந்து கீழவளவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ரங்கசாமி புரத்தில் அரசு புறம்போக்கு மற்றும் பாறை புறம்போக்குகளில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து மோசடி செய்தது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று, அரசு வக்கீல் ஷீலா, விசாரணை அதிகாரிகளான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜாசிங் ஆகியோர் 750 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், அரசுக்கு ரூ. 295.58 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, கீழவளவு போலீஸ் சரகம் இ.மலம்பட்டியைச் சேர்ந்த ராணி என்பவர் கொடுத்த ரூ. 50 ஆயிரம் மோசடி புகாரின் பேரில் கிரானைட் அதிபர்கள் பி.ஆர். பழனிச்சாமி, ரபீக் ராஜா மற்றும் 3 நபர்கள் மீ+து மேலூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இது தொடர்பாக 170 பக்க குற்றப்பத்திரிகையும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் 920 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 295 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலூர் கோர்ட்டில் நடந்து வரும் கிரானைட் முறைகேடு வழக்குகளில் இதுவரை 65 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் 67 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SourcE: http://www.maalaimalar.com/News/District/2017/04/05142942/1078222/Granite-abuse-case-chargesheet-filed-in-Melur-court.vpf

Add comment


Security code
Refresh

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook