• Register

அரசு பள்ளியில் கழிப்பறை பற்றாக்குறை

மேலுார் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு போதிய அளவு கழிப்பறை இல்லாததால் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்பள்ளியில் 2,700 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். மாணவிகளுக்கு போதிய அளவு கழிப்பறை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பெற்றோர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள், மாணவிகளுக்கு போதிய அளவு கழிப்பறையும், தண்ணீர் வசதியும் இல்லை. தவிர கழிப்பறை சுத்தம் செய்ய நிரந்தர துப்புரவு பணியாளர் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் மாணவிகள் கழிப்பறைக்கு செல்வதை தவிர்க்க தண்ணீர் குடிப்பதில்லை. கடும் வெப்பத்தால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, கழிப்பறைக்கு செல்லாமல் தவிர்ப்பதால் பலவித நோய் தொற்றுக்கு ஆளாகி நோயாளிகளாக மாறி வருகின்றனர், என்றனர்.

தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலாராணி கூறுகையில், ''கூடுதல் கழிப்பறை கேட்டு அரசுக்கு மனு கொடுத்துள்ளோம். தண்ணீர் வசதி போதுமான அளவு உள்ளது. தற்காலிக துப்புரவு பணியாளரை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்து வருகிறோம்,'' என்றார்.

 

SourcE: http://www.dinamalar.com/district_detail.asp?id=1749350

Add comment


Security code
Refresh

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook