• Register

நூலக கட்டடங்கள் மேம்படுத்தப்படுமா?

நூலக கட்டடங்கள் மேம்படுத்தப்படுமா?

"கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என கல்வியின் மேன்மையை அவ்வையார் அழகாக குறிப்பிட்டுள்ளார். அறியாமை இருள் அகல தெரியாத விஷயங்களை கற்று தெரிய வேண்டும். இதற்காக அரசு, நேரடி வருவாய் தராத கல்வித்துறைக்கும், அதிகளவு வரிப்பணத்தை வாரி இறைக்கிறது. கல்வியாளர் நிறைந்த நாடு, புவியில் மேன்மை பெறும். இதற்காக கிராமங்களிலும் நூலகங்களை அரசு உருவாக்கியுள்ளது. அதை நிர்வகிக்கும் அதிகாரிகளோ, நூலகத்தை பாழடையச் செய்வதில் குறியாக இருப்பார்களோ என்னவோ? சில நூலகங்கள் யாரும் படிக்கும் நிலையில் இருப்பதில்லை. காரை பெயர்ந்து, கறைபடிந்து, மூடிக் கிடந்து, வாசகர்களை வஞ்சிக்கின்றன. இதுகூட பரவாயில்லை. கட்டிய கட்டடங்கள் திறக்கப்படாமலும், எல்லா வசதியிருந்தும் நூலகர் இல்லாத நிலையும் இளைஞர்களின் கற்கும் எண்ணத்தை கருகச் செய்கின்றன.தெருவெங்கும் திண்ணைப் பேச்சு, வீதிதோறும் வெட்டிப் பேச்சு என திரிந்து, காலத்தை வீணாக்கும் காளையர்கள் ஜாதி, மதம் என பிரிந்து காலம் காலமாக கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையை போக்க வீதிதோறும் நூலகத்தை திறந்து, திறம்பட நடத்த உறுதியெடுக்க வேண்டியது அவசியம். அரசும், கல்வித்துறையும் இதில் கவனம்

 

 

கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி.
 
மேலூர் கிளை நூலகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
Source: http://www.dinamalar.com/innermeetpom.asp?news_id=318230

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook